கடவுள் இருக்கிறார்! கடவுளுக்குத் தெரியும்! கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்! கடவுளுக்குப் பொதுவாக நட! கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! கடவுள் கைவிடமாட்டார்! கடவுளின்மீது பாரத்தைப் போடு!
கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.
கடவுள் கொடுத்தார்னுதான் 'ஜம்பம்' பேசுகிறான், அந்தக் கள்ளன்.
கடவுள், அவன் பக்கமா இருப்பது-அடுக்குமா?
கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?
*** கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?
கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?
கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்-காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்-கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.